​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது அணை விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் உறுதி

Published : Jan 08, 2020 4:31 PM

மேகதாது அணை விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் உறுதி

Jan 08, 2020 4:31 PM

மேகதாது மற்றும் தென்பெண்ணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில், மு.க.ஸ்டாலின், நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த முதலமைச்சர், தென்பெண்ணை மூல வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, மேலும் ஒரு இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் கூறினார். தென்பெண்ணையாற்று விவகாரத்தில், நல்ல முடிவை எடுக்குமாறு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், முதலமைச்சர் தெரிவித்தார்.

Watch More ON : https://bit.ly/35lSHIO