​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்லவே வந்துள்ளோம்; பாராட்ட அல்ல - துரைமுருகன்

Published : Jan 08, 2020 12:48 PM

எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்லவே வந்துள்ளோம்; பாராட்ட அல்ல - துரைமுருகன்

Jan 08, 2020 12:48 PM

எதிர்க்கட்சிகளாகிய தாங்கள் அரசை  குற்றம் குறை சொல்லவே வந்துள்ளதாகவும் பாராட்ட அல்ல என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமியின் குற்றம்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் எதிரிக் கட்சிகளாக குற்றம் குறை சொல்கிறார்களே தவிர பாராட்ட மனம் வரவில்லை என்றும் கூறினார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், ஒரு முறை பேரறிஞர் அண்ணா உரையாற்றும் போது தாங்கள் ஆளும்கட்சிக்கு லாலி பாட வரவில்லை என்றும், குற்றம் குறையை எடுத்து சொல்லவே வந்ததாகவும் கூறியதை சுட்டிக்காட்டினார்.

அப்போது அதே அண்ணா தான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியதாக அமைச்சர் குறிப்பிட, மல்லிகைக்கு மணம் இருந்தால் பரவாயில்லை என்றும் காய்ந்த பூவாக இருந்தால் என்ன செய்வது என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்

Watch More ON : https://bit.ly/35lSHIO

Also Read : மீன் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை வராது - அமைச்சர் ஜெயக்குமார்