​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

Published : Jan 08, 2020 9:41 AM



12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

Jan 08, 2020 9:41 AM

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் மேலும் 36 ஆயிரம் டன் வெங்காயம் வந்தடையும் என்றும்  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலையை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதியை மத்திய அரசு மேற்கொண்டதாகக் கூறினார். அதன் பயனாக, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இதுவரையில் 12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள், வெளிநாடுகளிலிருந்து கூடுதலாக 36 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்ட ராம்விலாஸ் பஸ்வான், இதனால் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.