​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் 2.65 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published : Jan 07, 2020 9:13 PM

சென்னை விமான நிலையத்தில் 2.65 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Jan 07, 2020 9:13 PM

இலங்கை மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட, இரண்டாயிரத்து 650 கிராம் எடையிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த வெவ்வேறு விமான பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது 5 பேர் தங்கத்தை உருக்கி மலக்குடலில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதேபோன்று சார்ஜாவில் இருந்து வந்த ஒருவனிடம் மேற்கொண்ட சோதனையில், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த இரு தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு 6 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் எனவும், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளதாகவும் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.