​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தையின் இறுதிச்சடங்கில் அனைவரையும் நெகிழச் செய்த ஒன்றரை வயது மகள்

Published : Jan 07, 2020 1:41 PM

தந்தையின் இறுதிச்சடங்கில் அனைவரையும் நெகிழச் செய்த ஒன்றரை வயது மகள்

Jan 07, 2020 1:41 PM

ஆஸ்திரேலியாவில், புதர் தீயை அணைக்கச் சென்று, உயிரிழந்த தன்னார்வலரின் இறுதிச்சடங்கில், அவரது ஒன்றரை வயது மகள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அங்கும் இங்கும் நடைபயின்ற நிகழ்வு, அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.

மேற்கு சிட்னியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ((Andrew)), ஜியோப்ரி கியாடோன்((Geoffrey Keaton)) ஆகியோர் தீயணைப்புத்துறையில் தன்னார்வலர்களாக பணியாற்றினர். இவர்கள் புதர் தீயை அணைக்கும் பணிக்குச் சென்றபோது, வாகனத்தின் மீது மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இவர்களில், ஆன்ட்ரூவின் இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்((Scott Morrison)), அவரது மனைவி ஜெனி((Jenny)) ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது, ஆன்ட்ரூவின் ஒன்றரை வயது குழந்தை சார்லோட்((Charlotte)), சவப்பெட்டியை சுற்றி வந்ததோடு, அரச மரியாதையின்படி, தனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட, தந்தையின் தொப்பியை, அணிந்து கொண்டது.