எம்எல்ஏக்கள் 50 சதவீத நிதி ஒதுக்கினால் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் - செங்கோட்டையன்
Published : Jan 07, 2020 12:53 PM
எம்எல்ஏக்கள் 50 சதவீத நிதி ஒதுக்கினால் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் - செங்கோட்டையன்
Jan 07, 2020 12:53 PM
சட்டமன்ற உறுப்பினர்கள் 50 சதவீத நிதி ஒதுக்கினால், அவர்களது தொகுதிகளில் அரசு சார்பில் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் பிரதிகளை அரசு வழங்கியுள்ளது என்றும், உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு 5 ஆயிரம் பிரதி நூல்கள் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.