பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்
Published : Jan 07, 2020 7:28 AM
பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்
Jan 07, 2020 7:28 AM
பாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி சிரோன்மணி அகாலிதளம் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதர் ஷாவை நேரில் ஆஜராகுமாறு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாகவும், அதே நேரம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், பிறந்ததாகக் கருதப்படும் நான்கானா சாகிப் குருத்வாரா மீதும் சீக்கியர்கள் மீதும் கல்வீசித் தாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p