​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் - விளக்கம் கேட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம்

Published : Jan 06, 2020 5:36 PM

மின் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் - விளக்கம் கேட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம்

Jan 06, 2020 5:36 PM

சென்னை சூளைமேடு அருகே மின் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவ்வழியாக நடந்து சென்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, மின்வாரிய அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 4ம் தேதி சூளைமேட்டில் மின்பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி லீமா ரோஸ் என்ற பெண் பலியானார். இந்நிலையில் தீ விபத்துக்கு முன்னர், லீமா ரோஸ் அப்பகுதியில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்த சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. மின்பெட்டி வெடித்து தீவிபத்து ஏற்பட்டவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மற்ற காட்சிகள் பதிவாகவில்லை.

இதனிடையே இந்த மின் பெட்டியில் ஏற்கனவே இரு முறை தீப்பிடித்திருப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், பள்ளி ஒன்றும் அருகிலுள்ள நிலையில் இதுவரை அதனை மாற்றவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

Watch online: https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg