​​ 3 நாடுகள் பங்கேற்கும் 20ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 நாடுகள் பங்கேற்கும் 20ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

Published : Feb 25, 2018 7:32 PM

3 நாடுகள் பங்கேற்கும் 20ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

Feb 25, 2018 7:32 PM

இலங்கையில் 3 நாடுகள் பங்குபெறும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதில் இருந்து இந்திய அணியின் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் ஆறாம் தேதி இலங்கையில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய அணித் தலைவராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். சிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்ணா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சகல், அக்சர் பட்டேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனாத்கட், முகமது சிராஜ், ரிசப் பந்த் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். விராட்கோலி, மகேந்திர சிங் தோனி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.