​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடப்பு கணக்கு பற்றாக்குறை 2வது காலாண்டில் குறைந்தது - ரிசர்வ் வங்கி

Published : Dec 31, 2019 11:18 PM

நடப்பு கணக்கு பற்றாக்குறை 2வது காலாண்டில் குறைந்தது - ரிசர்வ் வங்கி

Dec 31, 2019 11:18 PM

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2வது காலாண்டில் கணிசமாக குறைந்துள்ளது.

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே சமநிலை இல்லாத போது வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இறக்குமதி அதிகமாக இருப்பதால் நடப்பு கணக்கில் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் 630 கோடி டாலராக பற்றாக்குறை குறைந்து இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 1900 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1420 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.