​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக ரிலையன்சின் புதிய நிறுவனம்

Published : Dec 31, 2019 1:47 PM

அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக ரிலையன்சின் புதிய நிறுவனம்

Dec 31, 2019 1:47 PM

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் (jio mart) எனும் புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு இதுதொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ மார்ட் எனும் பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை அளிக்கப்படும், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ரீடெயில் தெரிவித்துள்ளது. ஜியோ மார்ட் மூலம் 50 ஆயிரம் பொருள்களை விற்கவும் ரிலையன்ஸ் ரீடெயில் முடிவு செய்துள்ளது.