​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோழை மாதிரி ஒளிந்து கொண்டுள்ள நித்யானந்தா ஒரு தேசத்துரோகி - ராமானுஜ ஜீயர்

Published : Dec 30, 2019 8:14 AM

கோழை மாதிரி ஒளிந்து கொண்டுள்ள நித்யானந்தா ஒரு தேசத்துரோகி - ராமானுஜ ஜீயர்

Dec 30, 2019 8:14 AM

நித்யானந்தா கோழை மாதிரி ஒளிந்து கொண்டிருப்பதாக, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜீயர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் நித்யானந்தா அதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். மாறாக ஓடி ஒளிந்துகொண்டு நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருப்பது தவறு.

நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தவாறு உள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடக நீதிமன்றம், குஜராத் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அவரை எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நமது நாட்டையும் தர்மத்தையும் நித்யானந்தா மதிப்பவரானால் காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொண்டல்லவா வேறு நாட்டிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் நாட்டை விட்டு ஓடி தேசத்துரோக செயலில் ஈடுபட்டுள்ளார் என்றார்.