​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணையில் நீர்திறக்கும் காலம் 19 நாட்களுக்கு நீட்டிப்பு

Published : Dec 27, 2019 7:52 PM

மேட்டூர் அணையில் நீர்திறக்கும் காலம் 19 நாட்களுக்கு நீட்டிப்பு

Dec 27, 2019 7:52 PM

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் காலத்தை மேலும் 19 நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்கும் காலம் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 28ஆம் தேதி முதல் வினாடிக்கு 600 கன அடி வீதம் 19 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்றும், நீர் திறப்பால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.