​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடன் நிறைவடைந்த வர்த்தகம்

Published : Dec 27, 2019 4:54 PM



பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடன் நிறைவடைந்த வர்த்தகம்

Dec 27, 2019 4:54 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 575 புள்ளிகளில் நிறைவுற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 245 புள்ளிகளில் நிலை கொண்டது. நாளை பொதுத்துறை வங்கி தலைவர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசிக்க இருப்பதை முன்னிட்டு, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விலை ஏற்றத்துடன் விற்பனையானது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடப்பு மாதத்தில் 6170 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியிருப்பதும் சந்தையின் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து, 71 ரூபாய் 38 காசுகளாக இருந்தது.