​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் 3வது நாளாக வர்த்தகம் சரிவு

Published : Dec 26, 2019 6:10 PM

இந்திய பங்குச்சந்தைகளில் 3வது நாளாக வர்த்தகம் சரிவு

Dec 26, 2019 6:10 PM

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் சரிந்து 41 ஆயிரத்து 163 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 88 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 126 புள்ளிகளில் நிலை கொண்டது.

சீனாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற டிரம்பின் அறிவிப்பு, முதலீட்டாளர்களை கவரவில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லாபம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதாலும் சந்தை சரிவடைந்துள்ளது.

தொலைத்தொடர்பு, எரிசக்தி உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. அதிகபட்சமாக யெஸ் வங்கி நிறுவன பங்கு 5 சதவீதம் வரை சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 71 ரூபாய் 31 காசுகளாக இருந்தது.