​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இம்ரான்கான் போல செயல்படுகிறார் - சோயிப் அக்தர் பாராட்டு

Published : Dec 25, 2019 11:05 AM

விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இம்ரான்கான் போல செயல்படுகிறார் - சோயிப் அக்தர் பாராட்டு

Dec 25, 2019 11:05 AM

கேப்டன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இம்ரான்கான் போல் செயல்படுவதாக அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.

லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலியை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு பாராட்டினார். இம்ரான்கான், மேட்ச் வின்னர்களை எப்படி அணியில் சேர்ப்பது என்பதை அறிந்து வைத்து இருந்ததாகவும், அதே போல் விராட் கோலியும் செயல்படுவதாக கூறிய அக்தர், விராட் கோலி தீவிரத்துடன் விளையாடுவதாகவும், நிறைய ரன்களை குவிப்பதாகவும், அவரை களத்தில் மட்டுமல்லாது மைதானத்துக்கு வெளியேயும் இந்திய அணி வீரர்கள் பின்பற்றுவதாக அக்தர் புகழ்ந்தார்.

ஒரு அணியின் கேப்டன் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடினால், கேப்டன் பயிற்சியளித்தால், கேப்டன் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்தால், ஒரு கேப்டனே எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினால் அந்த அணியில் உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் தானாகவே உங்கள் சிறந்ததைச் செய்வீர்கள்.

அது தான் தற்போதைய இந்திய அணி என புகழாரம் சூட்டியுள்ளார் அக்தர்.

இம்ரான் கான் ஒரு தந்திரமிக்க கேப்டன் அல்ல, ஆனால் மேட்ச் வின்னர்களை எவ்வாறு சேகரிப்பது என்பது அவருக்குத் தெரியும். இப்போது இந்தியாவும் அவ்வாறே செய்கிறது, களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வீரர்களின் நடத்தையை உறுதிப்படுத்த இந்தியா கடுமையான விதிகளைக் கொண்டுள்ளதாக அக்தர் குறிப்பிட்டார்.