​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என் மீது பாலியல் வழக்கு போட முடியாது - முகநூலில் நித்தி கருத்து

Published : Dec 25, 2019 7:36 AM



என் மீது பாலியல் வழக்கு போட முடியாது - முகநூலில் நித்தி கருத்து

Dec 25, 2019 7:36 AM

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ள பிரபல சாமியார் நித்தியானந்தா மீண்டும் முகநூல் மூலம் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அதில் 2010ம் ஆண்டில் கர்நாடக அரசு தன் மீது வேண்டுமென்றே பாலியல் வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட்டார். வழக்கு போட்ட பின்னரே புகார் தர வருமாறு மக்களை கூவி கூவி அழைத்ததாக கூறினார்

தம் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் போட வேண்டும் என்றால் 2002ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்ததாக  கூறி தான் எந்த வழக்கும் போட முடியும் என்றும், அதன் பின்னர் எந்த வழக்கும் போட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் தாம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எந்த வழக்கும் போட முடியாது. 2002ம் ஆண்டு முதலே தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது.

புகார் கொடுபவர்கள் 2002-க்கு பிறகு நடந்த குற்றம் என கூறினால் அந்த பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும். எனவே 2002க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என புகார் கொடுங்கள் என வேடிக்கையாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

பல விஷயங்களில் ஜெயித்து வந்த போராளி நான் என கூறியுள்ள அவர், நெத்தியடி போல தம்மை எதிர்பவருக்கு நித்தியடி கொடுக்கலாம் வாருங்கள் என சீடர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.