​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியப் பங்குச்சந்தைகளில் 2வது நாளாக வர்த்தகம் சரிவு

Published : Dec 24, 2019 4:09 PM

இந்தியப் பங்குச்சந்தைகளில் 2வது நாளாக வர்த்தகம் சரிவு

Dec 24, 2019 4:09 PM

இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. 

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் குறைந்து  41 ஆயிரத்து 461 புள்ளிகளில் நிறைவுற்றது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 12 ஆயிரத்து 214 புள்ளிகளில் நிலை கொண்டது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ் போன்ற பெரு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது இன்டெக்சின் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் சரிவுடனே முடிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 71 ரூபாய் 22 காசுகளாக இருந்தது.