​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்தியானந்தாவை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்

Published : Dec 20, 2019 5:38 PM

நித்தியானந்தாவை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்

Dec 20, 2019 5:38 PM

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால், கர்நாடக போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நித்யானந்தாவை ஆள் கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், பாலியல் வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள். பாலியல் வழக்கில் நித்யானந்தாவை கண்டு பிடிக்க பெங்களூர் போலீசாருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் ‘நித்யானந்தாவை கைது செய்வதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சி.பி.ஐ. மூலமாக ‘இன்டர்போல்’ உதவியை நாடி உள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்யாததால் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, அதனால் இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.