​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் : திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு

Published : Dec 20, 2019 12:51 PM

குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் : திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு

Dec 20, 2019 12:51 PM

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

வள்ளுவர்கோட்டத்தில் நேற்று  பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்திருந்தது. அதை மீறி நடைபெற்ற  போராட்டத்தில், திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில்  திருமாவளவன், நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம். கிருஷ்ணா உட்பட 600 பேர் மீது  சட்ட விரோதமாக கூடுதல், தடையை மீறி போராடுதல் ஆகிய பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல்,  பட்டினப்பாக்கத்தில் முதல்வர் வீட்டை நேற்று முன்தினம்  தடையை மீறி முற்றுகையிட முயன்ற ஆயிரம் பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.