​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிப்பு

Published : Dec 20, 2019 10:27 AM

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிப்பு

Dec 20, 2019 10:27 AM

டெல்லியில் கடும் குளிருடன் பனிக் காற்று வீசி வரும் சூழலில், பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நடப்பு பருவத்தில் முதல்முறையாக நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.2 டிகிரி செல்சியசாக பதிவானது.
அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே அங்கு பதிவானது.

இந்நிலையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.

ஆனாலும் நகரை சூழ்ந்துள்ள அடர் பனிமூட்டத்தால் சில விமானங்கள் தாமதாகியுள்ளன. மோசமான வானிலை காரணமாக விமான இயக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலையம் சார்பில் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விமான நிலவரங்களை தொடர்ந்து சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.