​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய உச்சத்தில் தொடரும் இந்திய பங்குச்சந்தை - வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

Published : Dec 19, 2019 4:22 PM

புதிய உச்சத்தில் தொடரும் இந்திய பங்குச்சந்தை - வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

Dec 19, 2019 4:22 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தில் தொடர்கிறது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 673 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 259 புள்ளிகளில் நிலை கொண்டது.

ரசாயனம் உள்ளிட்ட அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா வரி விலக்கு அறிவித்தது போன்ற சர்வதேச காரணிகள் சாதகமாக இருந்ததால், சந்தையில் 3வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

வாகன துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் குறைந்து 71 ரூபாய் 13 காசுகளாக உள்ளது.