​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகன தணிக்கையின் போது குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்ததாக திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

Published : Dec 18, 2019 12:45 PM



வாகன தணிக்கையின் போது குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்ததாக திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

Dec 18, 2019 12:45 PM

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் வாகன தணிக்கையின் போது குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மறித்த பொழுது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

வழக்கு பதிவு செய்ய போலீசார் முயன்ற சமயத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் தகராறில் ஈடுபட்டது குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஞானபிரகாசம் மற்றும் அவரது நண்பர் ரோஷன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளைஞரையும் மூன்று பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.