​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உன்னாவ் மாவட்டத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை

Published : Dec 16, 2019 4:39 PM

உன்னாவ் மாவட்டத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை

Dec 16, 2019 4:39 PM

பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவதேஷ் சிங் என்பவன் தன்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாக தீக்குளித்த பெண் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் வழக்கு பதியப்பட்ட நிலையில் அவதேஷ் சிங் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக உன்னாவ் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv