​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா -சீனா எல்லைப் பேச்சுவார்த்தையை தாஜ்மகால் அருகே நடத்த பரிசீலினை

Published : Dec 16, 2019 8:49 AM



இந்தியா -சீனா எல்லைப் பேச்சுவார்த்தையை தாஜ்மகால் அருகே நடத்த பரிசீலினை

Dec 16, 2019 8:49 AM

இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ வரும் 21 ம் தேதி டெல்லி வருகிறார்.

22ம் தேதி தலைநகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஆக்ராவுக்கு மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பேச்சு நடத்தியதைப் போல் இநத் பேச்சுவார்த்தையை தாஜ் மகால் அருகே நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் நடத்திய பேச்சுவார்த்தைகளால் பெரிய பலன் ஏதும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானுடன் சீனா கொண்ட நட்பால் இநதிய சீனா உறவில் சிக்கல் நீடிக்கிறது.