​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்லூரி விழாவில் காதலை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்... கனிவோடு ஏற்றுக் கொண்ட இளம்பெண்

Published : Dec 16, 2019 7:51 AM

கல்லூரி விழாவில் காதலை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்... கனிவோடு ஏற்றுக் கொண்ட இளம்பெண்

Dec 16, 2019 7:51 AM

இங்கிலாந்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் கல்லூரி விழாவின் போது தனது காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது.

வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் தீயணைப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனது தோழி ஹெலனாவை, ஜேம்ஸ் எட்ஜ் என்பவர் அழைத்திருந்தார்.

விழாவின் ஒரு கட்டத்தில் பயிற்சி முடித்த வீரர்கள் வரிசையாக நின்று கொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு ஹெலனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நடப்பது புரியாமல் சென்ற அவருக்கு ஜேம்ஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.

தனது 5 ஆண்டு கால நண்பனின் காதலை ஏற்றுக் கொள்வதாக ஹெலன் கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் கூடியிருந்த அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.