​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமானப்படைக்கு ரூ.26 ஆயிரம் கோடியில் தேஜஸ் வகை விமானங்கள்

Published : Dec 16, 2019 7:43 AM



விமானப்படைக்கு ரூ.26 ஆயிரம் கோடியில் தேஜஸ் வகை விமானங்கள்

Dec 16, 2019 7:43 AM

இந்திய விமானப்படைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தேஜஸ் வகை விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

83 என்ற எண்ணிக்கையில் தேஜஸ் மார்க் 1ஏ வகை விமானங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் கிரிஷ் தியோதரே தெரிவித்துள்ளார்.

விமானம் ஒன்றுக்கு 310 கோடி ரூபாய் என்ற அளவில் ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒப்பந்தம் போடப்பட்ட 36வது மாதங்களில் இருந்து மார்க் 1ஏ விமானங்கள் வழங்கப்படுவது தொடங்கும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் 16 விமானங்கள் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் 2028ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் விமானப்படையில் சேர்க்கப்படும் என்றும் கிரிஷ் கூறியுள்ளார்.