​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டை உடைத்து வேட்பு மனுக்களை திருட முயற்சி

Published : Dec 15, 2019 11:06 AM

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டை உடைத்து வேட்பு மனுக்களை திருட முயற்சி

Dec 15, 2019 11:06 AM

திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்பு மனுக்களை திருட முயற்சி நடைபெற்றுள்ளது.

வடகண்டம் ஊராட்சி அலுவலகத்துக்கு இன்று காலை எழுத்தர் கணபதி வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே வாக்காளர் பட்டியல், அலுவலக ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவை சிதறி கிடந்தது.

அவர் வைத்திருந்த ஆயிரத்து 500 ரூபாய் பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. மேலும் வேட்பு மனுக்கள் வைத்திருந்த இரும்பு பீரோவை, மர்ம நபர் உடைக்க முயற்சித்து முடியாததால் விட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது.

நேற்று வரை கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு  27பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாகவும், அவை பத்திரமாக இருப்பதாகவும் எழுத்தர் கணபதி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv