​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனக்கு ஆலோசனை வழங்கிய ரசிகரை சந்திக்க விரும்பும் சச்சின்

Published : Dec 15, 2019 8:31 AM

தனக்கு ஆலோசனை வழங்கிய ரசிகரை சந்திக்க விரும்பும் சச்சின்

Dec 15, 2019 8:31 AM

சச்சின் டெண்டுல்கர் தன்னை சந்திக்க வேண்டும் என கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, ட்விட்டர் மூலம் தேடப்பட்டு வந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட சென்னை வந்த போது தன்னை சந்தித்த ரசிகர் ஒருவர் தனது முழங்கை பேட் குறித்து ஆலோசனை வழங்கியதாகவும், அவரை தற்போது சந்திக்க விரும்புவதாகவும் பதிவிட்டிருந்தார். 

இந்த பதிவினை கண்ட ஒருவர் அது தனது உறவினர் எனவும், சச்சின் அவருக்கு அளித்த ஆட்டோகிராபை புகைப்படமாகவும் பதிவிட்டிருந்தார். விசாரணையில், அந்த ரசிகர் சென்னை பெரம்பூரில் உள்ள பெரியார் நகரை சேர்ந்த குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv