​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒசூர் அருகே சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

Published : Dec 15, 2019 8:17 AM

ஒசூர் அருகே சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

Dec 15, 2019 8:17 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே இரண்டு குழுக்களாக சுற்றித்திரியும் 80 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியில் ஏற்கனவே 30 காட்டு யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், மேலும் 50 யானைகள் அங்கு நுழைந்துள்ளன. இதில் 15 யானைகள் ஒட்டேனூர் என்னுமிடத்தில் முகாமிட்டுள்ளன.

காட்டுயானைகள் கிராமப் பகுதிகளிலேயே சுற்றி வருவதால் நெல்,ராகி உள்ளிட்டவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

யானைகள் அனைத்தையும் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு நிரந்தரமாக விரட்டிட வேண்டுமென வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv