​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுல் காந்திக்கு சிவசேனா கடும் கண்டனம்

Published : Dec 14, 2019 9:44 PM

ராகுல் காந்திக்கு சிவசேனா கடும் கண்டனம்

Dec 14, 2019 9:44 PM

காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா கட்சி, ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த விமர்சனத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

இதுதொடர்பாக, சிவசேனாவின் எம்.பி.யும், மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசை உருவாக்கி கிங் மேக்கர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தியை மறைமுகமாக சாடியிருக்கிறார்.

மகாத்மா காந்தியைப் போல், பண்டித ஜவஹர்லால் நேருவைப் போல், வீர சாவர்க்கரும், இந்திய  சுதந்திரத்திற்காக, வாழ்க்கையைத் தியாகம் செய்தவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே, வீர சாவர்க்கர் மராட்டிய மண்ணின் மைந்தராக இருந்தாலும், என்றும், எப்போதும் மதிக்கப்பட வேண்டிய தேசிய அடையாளம் என்றும், அதில், எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டிருக்கிறார். 

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv