​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகள்கள் கவனிக்காமல் விட்டதால், மனமுடைந்து வயதான தம்பதி தற்கொலை

Published : Dec 14, 2019 9:12 PM

மகள்கள் கவனிக்காமல் விட்டதால், மனமுடைந்து வயதான தம்பதி தற்கொலை

Dec 14, 2019 9:12 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகள்கள் கவனிக்காமல் விட்டதால், மனமுடைந்து வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து - சுப்பாத்தாள் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் செய்வித்து அவர்கள் வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், சுப நிகழ்வுகளுக்கு மட்டும் சென்று பெற்றோரை பார்த்து பார்த்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காளிமுத்து - சுப்பாத்தாள் தம்பதியின் உடல்கள் வீட்டின் அருகேயுள்ள பிஏபி கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக தம்பதியர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv