​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில், 5 மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு

Published : Dec 14, 2019 8:48 PM

தமிழ்நாட்டில், 5 மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு

Dec 14, 2019 8:48 PM

தமிழ்நாட்டில், ஐந்து மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் உள்ளனர். இவர்களது ஓய்வு பெறும் வயது 58. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகளுக்கு நிர்வாகக்குழு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும்.

கடந்த சில ஆண்டுகளாக பணி நீட்டிப்பு பெறும் நீதிபதிகள் குறித்து நிர்வாக குழு முழுமையாக விசாரித்து, அதன்பின்னரே பணி நீட்டிப்பு வழங்கி வருகிறது.

இந்த வகையில், ஆய்வு மேற்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு, மாவட்ட நீதிபதிகள் தேவநாதன், கோமதிநாயகம், தானேந்திரன், கணேசன், மீனாசதீஷ் ஆகியோருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv