​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு தினங்களில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - RS பாரதி

Published : Dec 14, 2019 7:15 PM

இரு தினங்களில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - RS பாரதி

Dec 14, 2019 7:15 PM

உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் இரு தினங்களில் அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் 2011 ஆம் ஆண்டில் நடந்ததை போல யாராவது தில்லு முல்லை செய்தால் அவர்கள் எல்லாம் நிச்சயமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை செல்ல நேரும் என்றார்.

இதுபோன்ற அம்சங்களை வலியுறுத்தி மனுவாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனுவாக கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv