​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுல் காந்தி பேசியதில் தவறில்லை - தயாநிதி மாறன்

Published : Dec 14, 2019 6:23 PM

ராகுல் காந்தி பேசியதில் தவறில்லை - தயாநிதி மாறன்

Dec 14, 2019 6:23 PM

பாலியல் வன்கொடுமைகள் வடக்கு மாநிலங்களில் அதிகளவில் நடப்பதாகவும் ராகுல்காந்தி பேசியது உண்மைதான் என்றும் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார்.

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சீதக்காதி நகரில் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றார். இது போல அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தவர்களை, கண்டிக்க வேண்டிய இடத்தில் எதிர்கட்சிகள் இருப்பதாகவும்,  இதை தான் ராகுல் காந்தி செய்ததாகவும் அவர் கூறினார்.  

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv