​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நூறு பிறவிகள் எடுத்தாலும் ராகுல் காந்தியால் சாவர்க்கர் ஆகமுடியாது" பாஜக கடும் விமர்சனம்

Published : Dec 14, 2019 5:58 PM

"நூறு பிறவிகள் எடுத்தாலும் ராகுல் காந்தியால் சாவர்க்கர் ஆகமுடியாது" பாஜக கடும் விமர்சனம்

Dec 14, 2019 5:58 PM

ராகுல் காந்தி, நூறு பிறவிகள் எடுத்தாலும், தேசப்பற்றாளர் வீர் சாவர்க்கர் போல் மாற முடியாது என, பாரதிய ஜனதா கட்சி கூறியிருக்கிறது.

மேக் இன் இந்தியா, ரேப் இன் இந்தியாவாக மாறிவிட்டதாக கூறிய ராகுல் காந்திக்கு, பல்வேறு மட்டங்களிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதற்கு மன்னிப்பு கோர முடியாது என்ற ராகுல் காந்தி, தாம் ஒன்றும், இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் அல்ல என்று கூறினார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பட்ரா (Sambit Patra), மோடி அரசின் மகத்தான நடவடிக்கைகளை எதிர்க்கும் ராகுல் காந்தி, பாகிஸ்தானுக்கு உகந்த மொழியிலேயே பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேக் இன் இந்தியா என்ற மாபெரும் திட்டத்தை பாலியல் குற்றங்களோடு ஒப்பிடும் அளவிற்கும், ராகுல்காந்தி தரம் தாழ்ந்துவிட்டதாக சம்பிட் பட்ரா குற்றம்சாட்டியிருக்கிறார்.