​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் பெண் செய்தியாளரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அமைச்சர் கைது

Published : Dec 14, 2019 5:48 PM

அமெரிக்காவில் பெண் செய்தியாளரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அமைச்சர் கைது

Dec 14, 2019 5:48 PM

நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நாட்டின் ஜார்ஜியாவில் மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது போட்டியாளர்கள் சிலர் கேமிராவின் முன் வந்தும், கைகளை நீட்டியும் சேட்டை செய்தனர். அப்போது போட்டியாளர் ஒருவர் திடீரென அவரது பின்புறத்தை தட்டி சென்றார். இதனால் பெண் தொகுப்பாளர் திகைப்பில் ஆழ்ந்தார்.

வீடியோவில் பதிவான அந்த காட்சியின் மூலம் அந்த நபர் யார் என்பது கண்டறியப்பட்டது. பெண் செய்தியாளரை அப்படி தட்டியவர், ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சரான தாமஸ் கால்வே என்பது தெரியவந்த தை, அடுத்து, அவர் மீதான புகாரின் பேரில் தாமஸ் கால்வேவை போலீசார் கைது செய்தனர்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv