​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 ஆண்டுகளில் அடையாறு, கூவம் சுத்தமான ஆறுகளாக மாறும் - மாநகராட்சி ஆணையர்

Published : Dec 14, 2019 5:43 PM

3 ஆண்டுகளில் அடையாறு, கூவம் சுத்தமான ஆறுகளாக மாறும் - மாநகராட்சி ஆணையர்

Dec 14, 2019 5:43 PM

கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜூன் மாதத்திற்குள் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அடையாறு, கூவம் ஆற்றங்கரை பகுதிகளில், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, அடையாறு, கூவம் ஆறுகள், அதன் கரைகள், அடையாறு முகத்துவாரம் போன்ற பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். புதிய மரக்கன்றுகளை நடுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அடுத்த மூன்று ஆண்டுகளில் கழிவுநீரே இல்லாத சுத்தமான ஆறுகளாக அடையாறு, கூவம் மாறும் என தெரிவித்தார்.