​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணை நீர் தேக்கத்தில் பாசி படர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக புகார்

Published : Dec 14, 2019 4:48 PM

மேட்டூர் அணை நீர் தேக்கத்தில் பாசி படர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக புகார்

Dec 14, 2019 4:48 PM

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர் தேக்கத்தில் நீரில் பாசி படிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு குறையாமல் உள்ள நிலையில் 16 கண் மதகு நீர் தேக்கத்தில் தண்ணீர் மீது பச்சை நிறத்திலும் நீல நிறத்தில் பாசி படலங்கள் படிந்துள்ளன.

இதனால் கரையின் இருபுறங்களிலும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இதை கண்டித்து தர்மபுரிபட்டின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துர்நாற்றத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv