​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குற்றாலம் அருவியில் குளிக்க தடை

Published : Dec 14, 2019 4:12 PM

குற்றாலம் அருவியில் குளிக்க தடை

Dec 14, 2019 4:12 PM

தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம், பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து அவர்களை அப்புறப்படுத்தினார்.