​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையின்றி செல்லாதீர்.. அமெ., இங்கிலாந்து, கனடா எச்சரிக்கை

Published : Dec 14, 2019 3:24 PM

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையின்றி செல்லாதீர்.. அமெ., இங்கிலாந்து, கனடா எச்சரிக்கை

Dec 14, 2019 3:24 PM

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளுமாறு, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா அரசுகள், தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து, அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.

இந்தநிலையில், பல்வேறு காரணங்களுக்காக வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, அந்நாட்டு அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக அங்கு செல்பவர்கள், நிலவும் சூழ்நிலைகளை ஊடகங்கள் வாயிலாக கவனித்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், நிர்வாக ரீதியிலான பயணங்களை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

அதே போல அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணத்தைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கனடா தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையற்ற பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையம் மற்றும் மொபைல் தகவல்தொடர்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv