​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

Published : Dec 14, 2019 3:21 PM

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

Dec 14, 2019 3:21 PM

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூண்டியில், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே, மிதமான சாரல் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டதை அடுத்து சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நண்பகலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கடந்த பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் காணப்படும் நிலையில், கூடவே சாரல் மழையும் பெய்ததால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளும் அறைகளுக்குள்ளேயே முடங்கினர்.