​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விதிகளை மீறி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்

Published : Dec 14, 2019 2:44 PM

விதிகளை மீறி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்

Dec 14, 2019 2:44 PM

கன்னியாகுமரி அருகே விதிகளை மீறி இயக்கப்பட்ட பேருந்து உட்பட 17 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்துள்ளது. அதன் காரணமாக தக்கலை பகுதிகளில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்பொழுது கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி வந்த இரண்டு பேருந்துகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பாரங்களை ஏற்றி வந்த 15 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.