​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

Published : Dec 14, 2019 10:59 AM

3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

Dec 14, 2019 10:59 AM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கியதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த அருண் என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், விக்னேஷ் பாண்டியன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Watch Polimer News Online :https://polimernews.com/dlive-tv