​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடமாநிலங்களை வாட்டும் கடுங்குளிர் - நடுங்கும் மக்கள்..பள்ளிகளுக்கு விடுமுறை

Published : Dec 14, 2019 7:58 AM



வடமாநிலங்களை வாட்டும் கடுங்குளிர் - நடுங்கும் மக்கள்..பள்ளிகளுக்கு விடுமுறை

Dec 14, 2019 7:58 AM

 

வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இரவுநேரவெப்பநிலை மிகவும் குறைந்ததால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் சில வாரங்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை துறை தெரிவித்துள்ளது.

சிம்லாவின் ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பனிப்பொழிவு காணப்படுகிறது. குளிர்காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையத் தொடங்கிவிட்டது. சிம்லா, லாவுல், கின்னார், குலு போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணிவரை மிதமான பனிப்பொழிவு காணப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனி மற்றும் மழை காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலி, கங்கோத்ரி-யமுனோத்ரி வழிகள் காலை முதல் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.

நைனிடால், சம்பாவத், பித்தோராகர், உதம்சிங்க நகர், டெஹ்ராடூன், ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி ஆகிய நாடுகளில் உள்ள நிர்வாகங்கள் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ளன.

Watch Polimer News Online :https://www.polimernews.com/dlive-tv