​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கந்துவட்டிக்கு கடன் வாங்கியவரின் வீடு, இடித்து தரைமட்டம்..!

Published : Dec 14, 2019 7:38 AM

கந்துவட்டிக்கு கடன் வாங்கியவரின் வீடு, இடித்து தரைமட்டம்..!

Dec 14, 2019 7:38 AM

மதுரையில் கந்துவட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியவரின் வீடு, பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெருவை சேர்ந்த குமார், தனது மனைவி, 3 பெண் குழந்தைகள் மற்றும் தாயாருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பாக மதிமுக கட்சி பிரமுகர் நாகராஜன் என்பவரிடம், 5 பைசா வட்டிக்கு 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதற்கான அசல் மற்றும் வட்டியை சரியாக செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக பணத்தை செலுத்த ஒரு ஆண்டு அவகாசம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் குமாருக்கு வேலை தருவதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதை நம்பி அவர் தூத்துக்குடி சென்றிருந்த சமயத்தில் 15 பேர் கொண்ட கும்பலுடன் வந்த நாகராஜ், வீட்டிலிருந்த குமாரின் தாயாரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, பொருட்களை சாலையில் வீசிவிட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து தள்ளியுள்ளார்.

தகவலறிந்து ஊருக்கு வந்த குமார், வீட்டின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் நாகராஜன் மீது தற்போது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு கடன் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார், நாகராஜன், செந்தில், சீனிவாசன் ஆகியோரை கைது செய்துள்ளனர்,