​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Dec 13, 2019 9:45 PM

ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்

Dec 13, 2019 9:45 PM

ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், லாட்டரி சீட்டு சம்பவத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துக்கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது என்றார். 

மக்களை பற்றி சிந்திக்காமல் எந்த வகையில் தேர்தலை தள்ளிவைக்கலாம் என்ற எண்ணம் தி.மு.க விடம் இருப்பதாக அவர் கூறினார். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலை கூட திமுக சந்திக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.