​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

Published : Dec 13, 2019 8:35 PM

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

Dec 13, 2019 8:35 PM

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கட்சி அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 

இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், இதுவரை ஒரு லட்சத்து 9  ஆயிரத்து 778 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.