​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ15 லட்சத்திற்கு ஏலம் என புகார்

Published : Dec 13, 2019 5:04 PM

மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ15 லட்சத்திற்கு ஏலம் என புகார்

Dec 13, 2019 5:04 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் ஆயிரத்து 500 வாக்குகள் உள்ளது. இங்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு  நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட தீர்மானித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி, ஊராட்சி பொது நிதிக்காக தலைவர் பதவியை ஏலம் விட்டு ஒருவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்குள்ள கோவிலில் நடைபெற்ற ஏலத்தில் 4 பெண் வேட்பாளர்களின் கணவர்கள் கலந்து கொண்டதில், ரூபாய்  2 லட்சத்தில் ஏலம் துவங்கி, சித்ரா ராமச்சந்திரன் என்பவர் பெயரில் ரூபாய் 15 லட்சத்தில் முடிவடைந்ததாகவும், அவரையே ஒருமனதாக தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv