​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published : Dec 13, 2019 1:34 PM



மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Dec 13, 2019 1:34 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில்,  நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 11 ம் தேதி நடப்பாண்டில் 4 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. நீர்வரத்தைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் 32 வது நாளாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.

இதனால் டெல்டா பாசன விவசாயிகள், மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு  நீர்வரத்து 4 ஆயிரத்து 988 கனஅடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது.